இடுகைகள்

அக்டோபர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Book review- Charlie and the chocolate factory

கதை: Charlie and the chocolate factory  ஆசிரியர்: Roald Dahl சிறுவயதில் என்னை ஈர்த்த ஓர் அற்புதமான கதை இது. மிட்டாய் விரும்பிகள் அனைவரும் படிக்க வேண்டிய கதை.🍭 சார்லி, ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்தவன். அவனுக்கு வோன்கா மிட்டாய் தொழிற்சாலை கடந்துபோக மிகவும் பிடிக்கும். அதன் வெளியில் நின்று, அங்கே இருந்து வரும் வாசனையை நுகர்ந்தபடி பள்ளிவிட்டு வீடு செல்வான்.வோன்கா தொழிற்சாலை, உலகிலேயே மிகப்பெரிய மிட்டாய் தயாரிக்கும் தொழிற்சாலை. அதனைச் சுற்றி பல மர்மங்கள் இருந்தன.🍫 தினமும் மிட்டாய் சாப்பிட முடியவில்லை என்றாலும்,சார்லி அவனது பிறந்த நாள் பரிசாக எப்போதும் ஒரு மிட்டாய் வாங்கி, அதை ஒரு மாதம் வைத்து சாப்பிடுவான்.🍭 அவனுக்கு வோன்கா தொழிற்சாலையை சுற்றி பார்க்கும் ஒரு பயணச்சீட்டு கிடைக்கிறது. அவனது தாத்தாவை அழைத்துக் கொண்டு அங்கே செல்கிறான்.🍫 அவனைப்போல பரிசு பெற்ற நான்கு சிறார்கள், தமது பெற்றோர்களுடன் அங்கே வருகின்றனர். அவர்கள் கனவிலும் எதிர்பார்க்காத நிறைய அதிசயங்கள் அங்கே நிகழ்கின்றன.🍬🍬🍭 அங்கு காணப்படும் சில சுவாரசியமான நாம் நம்புவதற்கு அரியவை: * என்றாவது மிட்டாய் ஆறு அல்லது மிட்டாய் வீழ்ச்...