சீனுவும் சிறுத்தையும்-3
நல்லவேளையாக சீனு ஏறிய மரம் சற்று சறுகலான மரம்.அதில் தன்னால் ஏற முடியாது என்று நினைத்த புலி🐅 ,அங்குமிங்கும் சுற்றி அலைந்தது.
விளக்கு வைக்கும் நேரம் ஆகியும் சீனுவை காணாமல் பூஜாவும் அவன் அன்னையும் தவித்தனர்.பூஜா அங்குமிங்கும் அலைந்து கொண்டு இருந்தாள். அந்த வழியே வந்த கலாம் சிங் அதனை கவனித்து விட்டார். அவர்கள் வீட்டுக்கு அருகே வந்து, 'என்ன அக்கா!!! சீனு இன்னும் வரவில்லையா' என்று கேட்டார்.'ஆமாம் தம்பி !!!ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே வந்துருக்கணும்..மழை வேறயா!!! பயமா இருக்கு' என்றார் சீனுவின் தாயார். 'இருங்க நம்ம ஆளுங்களை கூட்டிட்டு போய் பார்த்துட்டு வரேன்' என்றார்.உடனே பூஜா , 'இருங்க நானும் வரேன்' என்று அவளது அம்மாவின் மறுப்பையும் தாண்டி தன் தம்பியைத் தேடி அவருடன் ஓடினாள்.
மஞ்சரியில் இருந்து 10 ஆடவரும் நடுவில் பூஜாவும் கையில் லாந்தரை ஏந்தியபடி கெம்டி நோக்கி சென்றனர் .அனைவரின் கையிலும் கட்டைகளும் புலியைத் தாக்க கோடாரிகளும் இருந்தன. காட்டை நெருங்கியதும் பூஜா, சீனுவை அழைத்தவாரே சென்றாள். மரத்தில் அமர்ந்திருந்த சீனு விற்கு அக்குரலை கேட்டதும் தைரியம் ஏற்பட்டது . அவன் அங்கிருந்தவாறே குரல் கொடுத்தான்.
திடீரென்று ஏற்பட்ட வெளிச்சத்தை கண்ட புலி 🐅 , அத்தனை நபர்களை தன்னால் சமாளிக்க இயலாது என்று கடைசி முயற்சியாக , தன் இரையை பார்த்து உறுமியது. அத்துடன் ஒரே பாய்ச்சலில் தன் இருப்பிடத்தை நோக்கி சென்றது.
பூஜாவையும் மற்றவர்களையும் பார்த்த பின்னரே சீனு மரத்திலிருந்து கீழே வந்தான்.தன்னுடன் ஆட்டுக்குட்டியும் கூட்டிக்கொண்டு வீடு நோக்கி சென்றான்.அடுத்து வந்த சில நாட்களில் யாரும் அவ்வாட்டு குட்டியை தேடி வரவில்லை. சிப்பிக்கு மாற்றாக இல்லை என்றாலும் அந்த ஆட்டுக்குட்டி சீனுவிடம் நன்றியோடு இருந்து வந்தது.
புலி🐅 யிடம் மாட்டிய பிறகு, சீனு பள்ளி செல்லவில்லை. பள்ளி இறுதித்தேர்வு இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்கும். அதற்கு அவன் சென்றாலே போதும். ஆனால் போக முடியுமா என்றுதான் தெரியவில்லை. அவன் மீண்டும் ஒரு வருடத்தை வீணாக அதே வகுப்பில் கழிக்க விரும்பவில்லை. மழை வந்தால் புலி 🐅வேறு காட்டிற்கு இடம்பெயறக்கூடும். ஆனால் அவ்வருடம் மழையும் தாமதிக்கும் போலிருந்தது.
இரவு வேளையில் உஷ்ணம் அதிகமாக இருந்தது. 🐅 புலி பயம் அதிகமாக இருந்ததால் சீனுவின் தாயார் சிறு சன்னலை கூட விடாமல் அடைத்துவிட்டார். உஷ்ணம் அதிகமாக இருந்தாலும் சீனு எதுவும் பேசாமல் தூங்கினான். புழுக்கத்தினாலோ அல்லது வெளியில் கேட்ட சத்தத்தினாலோ அவனது உறக்கம் கலைந்தது. இருட்டாக இருந்த அறையின் மூலையில் சிறு விளக்கு மட்டும் ஆடிக்கொண்டிருந்தது. திடீரென்று வாசல் கதவிற்கு அருகில் இருந்து வந்த சத்தம் அவனை உற்று கவனிக்க வைத்தது. யாரோ தன் நகங்களால் கதவை சுரண்டுவது போல் சத்தம் கேட்டது. புலி🐅யின் வருகையை அவன் உணர்ந்தான். ஜன்னல் கதவைத் திறந்து கத்தினால் உதவிக்கு யாரேனும் வரக்கூடும் .ஆனால் அதற்குள் புலி 🐅 தப்பி ஓடிவிடும். அதனை உத்தேசித்த அவன், மெதுவாக நடந்து சென்று பழம் அறுக்க வைத்திருந்த அரிவாளை எடுத்தான்.
அந்த சத்தம் கேட்டு எழுந்த பூஜா, ' சீனு என்ன பண்ண போறே' என்றாள். 'ஸ்ஸ்!! அம்மாவை எழுப்பி விடாதே' என்றான் சீனு. 'யார் இங்கு தூங்கினா!!! எனக்கும் வெளியில நடக்கிறது நல்லா கேட்குது. யாரும் எதுவும் பண்ண தேவையில்லை!! நம்ம கதவை அவ்வளவு சீக்கிரம் உடைக்க முடியாது !!' என்றார் அம்மா. என்றாலும் சீனுவால் சும்மா இருக்க முடியவில்லை. கதவிற்கு சிறு தொலைவில் இருந்த சன்னலைத் திறந்து நோட்டமிட்ட அவன், அதன்வழியே புலி 🐅யை நோக்கி தன் அறிவாளை தூக்கி எறிந்தான். அந்தத்தாக்குதலை எதிர்பார்க்காத புலி, தன்னை தாக்கியவரை கூட பார்க்காமல் காட்டை நோக்கி ஓடியது. புலி 🐅யை துரத்தி விட்ட வெற்றியின் களிப்போடு உறங்கிப் போனான் சீனு.
அடுத்த நாள், புலி 🐅 யின் அட்டகாசத்தை பொறுக்க முடியாத கிராமத்தினர் , கெட்டி சென்று, திரு செபஸ்டினின் உதவியோடு புலியை விரட்ட வேண்டி, காட்டிலாகா அதிகாரிகளுக்கு மடல் எழுதினர்.
புலி 🐅 யிடம் அடுத்து சிக்கிய நபர் ,தபால் மணி. சாரு எப்பொழுதும் போல பால் கேன்களை சுமந்து செல்லும் போது, வழியில் பை ஒன்று கிடப்பதை கண்டான். அருகில் சென்று பார்த்தபோது ,அது மணியின் பை என்பது தெரிந்தது. அதில் ரத்த தடயங்களும் நிறைய இருந்தன. விரைவில் அச்செய்தி அருகிலிருந்த கிராமங்களுக்கு எல்லாம் பரவியது. எனினும் எவராலும் மணியின் விரலை கூட கண்டுபிடிக்க முடியவில்லை.
புலியைக் கண்டு ஊரே பயந்து கொண்டிருந்த வேளையில் சீனுவும் பூஜாவும், புலியை🐅 விரட்டி விட்ட தைரியத்தால் சிறிது வெளியில் உலவினர் .
புலி 🐅 ஒரு புரியாத புதிர். சில சமயம் நான்கு நாய்கள் 🐕 சேர்ந்து வந்தால் பயந்தாற் போல் தெரித்து ஓடிவிடும் . சில சமயம் பட்டப்பகலில், 4 ஆண்கள் கூடி வேலை பார்க்கும் இடத்தில் குதித்து ,அவர்களை காயப்படுத்தி செல்லும். அதே போல், அது ஒரு நாள் சீனு விடம் பயந்து ஓடியது என்றால், அது கோழை என்று அர்த்தமல்ல. அன்று அந்த அடிக்கு அது தயாராக இல்லை என்று அர்த்தம்.
சீனுவும் பூஜாவும் வயலில் இறங்கி வேலை செய்துகொண்டிருந்தனர். பூஜா வயல் வரப்பில் நடந்து சென்று , வயலின் அடுத்த முனையில் நின்று சீனுவுடன் விவாதித்துக் கொண்டிருந்தாள். சீனு,மரக் கிளைகளை உடைத்து, விறகுகளுக்கு தயார் செய்து கொண்டிருந்தான்.திடீரென்று பூஜை இருந்த திசையில், மலையின் உச்சியில் ஏதோ ஒரு உருவம் தெரிந்தது போல் தோன்றியது. அவள் பின்னாள் ஒரு சிறிய குன்று இருந்தது. அதன் உச்சியில் நின்று, புலி 🐅ஒன்று அவனை உற்று நோக்குவது போல அவனுக்குத் தோன்றியது. திடீரென்று அதனைக் காணவில்லை. 'அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் 'என்பது போல அவனுக்கு புலி 🐅தோன்றியிருக்கவேண்டும். தலையில் தட்டிக் கொண்டு ,வேலையைத் தொடர்ந்தான் சீனு. திடீரென்று ஏதோ அசைவது போல தெரிய, அத்திசையில் பார்த்தால் புலி 🐅ஒன்று பூஜாவை நோக்கி வந்து கொண்டிருந்தது.
அதனைப்பார்த்துக் கொண்டே, 'பூஜா!!!!!!' என்று அலறினான். அவன் கண்களிலிருந்த பீதியைக் கண்டு ,அவன் பார்க்கும் திசையில் அவளும் புலியை கண்டாள். புலி 🐅சுதாரித்து,அவளை நோக்கி ஓடி வருவதைக் கண்டு , அவள் வயலில் தேங்கியிருந்த சேற்றில் இறங்கி ஓட ஆரம்பித்தாள். குழம்பி இருந்த சேற்றில் ஓட முடியாமல் தடுமாறியது புலி 🐅. அவர்கள் இருவரும் போட்ட சத்தத்தில் 4 ஆண்கள் கட்டைகளை தூக்கிக் கொண்டு ஓடி வந்தனர் .சரமாரியாக புலியை 🐅 நோக்கி கட்டைகளை வீசினர்.அதனால் ஆவேசம் கொண்ட புலி 🐅 அங்கிருந்த ஒருவரின் மேல் பாய்ந்தது. பயத்தில், சீனு தன் கையிலிருந்த கோடரியை புலியின் 🐅நெற்றியை நோக்கி தூக்கி எறிந்தான் . அதற்குள் அங்கு வந்த கலாம் சிங், புலி 🐅யின் கழுத்தை நோக்கித் தன் வேலை வீசினார்.
அதிகம் காயம்பட்ட 🐅 புலி, பெரிய உறுமலுடன் அது வந்த குன்றை நோக்கி ஓடியது. கண்டிப்பாக அதன் உயிர் சில நாழிகை தான் இருக்கும் என்று எண்ணிய கலாம் சிங், தன்னுடன் சில ஆண்களைக் கூப்பிட்டுக் கொண்டு அதனை பின்தொடர்ந்து சென்றார். புலி 🐅யால் தாக்கப்பட்டவரை சிலபேர், மெல்ல தூக்கி கொண்டு வீட்டை நோக்கி சென்றனர்.சீனு கலாம் சிங்கின் பின்னால் சென்றான். குன்றின் அருகில் ஒரு சிறு ஆறு ஓடிக் கொண்டிருந்தது. அதில் ஒரு பக்கம் ரத்தக் கறை இருந்தது. புலி 🐅இங்கே நடந்து வந்திருக்க வேண்டும் என்று யூகித்து அந்த வழியே இறங்கி சென்றனர். தூரத்தில் புலி மூச்சு வாங்கிக் கொண்டே இருப்பதை கண்டனர் .சிறிது நாழிகை சென்றதும் அதனிடத்தில் எந்த அசைவும் இல்லை. கலாம் சிங் மட்டும் தைரியமாக அதனருகில் சென்று பார்த்தார். அது தன் இறுதி மூச்சை விட்டு இருந்தது. இப்படி தான் இறக்கக்கூடும் என்று நினைத்துக் கூட இருக்காது.
அதனைப் பார்த்த அனைவரும் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். புலியைக் கொன்றதில் தன் வீரத்தைக் காட்டிய சீனுவிற்கு புலியின் 🐅பற்களை கொடுத்தனர். அவற்றில் மூன்றை மட்டும் தனக்கும் பூஜா விற்கும் தன் அம்மாவிற்கும் எடுத்துக் கொண்டு, மற்றவர்களை ஊரில் சிறுவர்களுக்கு கொடுக்க பணித்தான் சீனு.
அன்றிரவு கலாம் சிங் ஆடு வெட்டி எல்லோருக்கும் விருந்து கொடுத்தார். புலியை 🐅 தலைகீழாக ஒரு நீண்ட குச்சியில் தொங்க விட்டு அருகில் இருந்த கிராமங்களில் கொண்டு போய் காட்டி விட்டு வந்தனர்.
சீனு கடைசியாக பள்ளிக்கு சென்றபோது, இறுதிப்பரீட்சை ஆரம்பமானது. செபஸ்டின் உட்பட மற்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் அவனைக் கண்டதில் மகிழ்ச்சி. புலியை 🐅கொன்றதில் அவன் பங்கும் இருந்தது என்ற தகவல் கெம்டி வரையில் சென்று அடைந்திருந்தது.
அவனைப் பார்த்து சிரித்த மருத்துவர்,' புதுசா எதுவும் நாய் 🐕வாங்கலையா' என்று கேட்டார். அவனோ சிப்பிக்கு மாற்றாக இல்லாவிடினும் ,தனது ஆடு பழகுவதற்கு ஏதுவாக இருந்ததைப் பற்றி கூறினான். அதற்கு தான் அளிக்கும் நீச்சல் 🏊 பயிற்சி பற்றி கூறிவிட்டு வீடு நோக்கி சென்றான்.
அன்று ஏனோ சாரு பொழுது சாயும் நேரம் வரை, கெம்டியிலிருந்து விட்டு சீனுவுடன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தான். புலியின் 🐅வருகையில் அவனுக்கு நிறைய நஷ்டம் ஏற்பட்டு இருந்தது.
நல்ல மழை !!!!!
சொட்ட சொட்ட நனைந்தபடி காட்டிற்குள் நடந்த சீனு, மஞ்சரியை அடைந்த போது, மழை விட்டிருந்தது. வயல்களில் உழவு வேலை நடந்துகொண்டிருந்தது. ஊரில் உள்ள சிறுவர்கள் அனைவரும் சேற்றில் இறங்கி கும்மாளமிட்டு கொண்டிருந்தனர். சீனுவிற்கு அவர்களைப் பார்த்ததும் அவர்களுடன் சேர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. அவன் வருகையை தூரத்திலேயே பார்த்துவிட்டு பூஜா, 'சீனு!!!வந்துட்டியா!!! வா விளையாடலாம்!!!!' என்று அழைத்தாள்.
அவளுடன் கைகோர்த்தபடி சென்ற சீனு, ஏனோ அவள் கையை இறுக்கினான். கைகளில் கனமான ஒன்று ஏதோ தென்பட, திரும்பிப்பார்த்த பூஜாவிற்கு ஆனந்தம் . ' நான் உன்னை சிவப்பு கலர் வளையல் தானே கேட்டேன் !!நீ வெள்ளையில் வாங்கிட்டு வந்துருக்க !!!!' என்றாள். பின் அவன் முகம் சுழிப்பதை பார்த்து ,' பரவாயில்லை!!! இது கூட நல்லாதான் இருக்கு!! !!' என்றாள்.இன்றைக்கு உனக்கு பிடிச்ச உணவு சமைத்துத் தரேன்!!' என்றும் வாக்குறுதி அளித்தாள்..'ம்ம்!!!! உனக்கு தெரியாது ஒரு மனுஷனுக்கு 5 மைல் தூரம் நடந்தால் எவ்வளவு பசிக்கும்னு' என்று மிடுக்காக கூறிவிட்டு ,வயலை நோக்கி நடந்தான் சீனு...
------முற்றும்------------
கருத்துகள்
கருத்துரையிடுக