Book review 10- when the clock strikes thirteen

 

மூன்றாம் ஆண்டு விழா
பதிவு : 3

கதை: when the clock strikes thirteen
ஆசிரியர் : Ruskin Bond

பத்மபூஷன் பத்மஸ்ரீ போன்ற விருதுகளைப் பெற்ற ரஸ்கின் பாண்டின் பல கதைகள் பாட புத்தகங்களில் இடம் பெற்றுள்ளது. இக்கதைத்தொகுப்பு பதினைந்து கதைகள் கொண்ட தொகுப்பு. இவற்றில் உள்ள அனைத்துக் கதைகளுக்கும் பொதுவாக அமைவன, அவற்றின் கதைகலன்களே.மலைவாழ் கிராமங்களில் வாழும் குழந்தைகள் பற்றியும் , அம்மக்களைப் பற்றியும் அவர் அதில் அழகாக வர்ணித்து இருப்பார்

குறிப்பாக,
Panther's moon

இக்கதையில் வரும் பிஸ்ணு என்னும் சிறுவன் பள்ளி செல்ல எத்தகைய அபாயங்களை கடந்து போகிறான் என்பதையும் அவனது விடா முயற்சியையும் அழகாய் உணர வைத்திருப்பார்.இயற்கையோடு ஒன்றிய மக்களின் வாழ்வு அனைத்து குழந்தைகளும் படித்து புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

A long walk for Bina
இக்கதையின் கரு முந்தைய கதையைப் போலவே அமைந்தாலும், பீனா, பிரகாஷ் ஆகியோர் படிப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள் நமது ஆர்வத்தை தூண்டுகிறது. அவர்களது ஆசிரியர் வளர்க்கும் தோட்டம் நம்மையும் செடிகள் நட வைக்கிறது.

The cherry tree
தாத்தாவும் பேரனும் சேர்ந்து வளர்க்கும் மரம் பற்றிய கதை. அம்மரம் பெரிதாகும் போது அவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் அது சொந்தமானது போல ஒரு உணர்வு ஏற்படுவது உறுதி.

Fairy glen palace , magic oil போன்ற கதைகள்  படிக்க ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்த திகில் கதைகள்.

தமிழில் இருப்பது போல வேலைகள் செய்யும் போது களைப்பு தெரியாமல் இருக்க சில பாடல்கள் குழந்தைகள் பாடுவது போல வரும்.

அறநெறிக் கதைகள், திகில் கதைகள் இந்தியர்களின் வாழ்வியல் முறைகளை ஆராயும் கதைகள் என புத்தகம் சிறார்களுக்கு நன்கு உதவும்

இதில் வரும் panther's moon கதையின் தமிழாக்கம் -https://kathaisolromkelunga.blogspot.com என்ற  வலைத்தளத்தில் சீனுவும் சிறுத்தையும் என்ற பெயரில் மூன்று பாகமாக உள்ளது.

#குழந்தைகள் #ReviewinTamil #ABOOKADAY #day10 #booksthatinspiredme #bookworm #bookaholic #writersofinstagram #writerstag #RuskinBond #whentheclockstrikesthirteen #bookstagram #ReviewPost #reviewtime #booksofinstagram #childrensbooks #childhood #childrensbookillustration #children

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பலாமரம்

Book review - perfectly imperfect