சீனுவும் சிறுத்தையும் -2
'ஓ தெரியுமே...பக்கத்து ஊர் தலைவரோட தலையை அது சாப்பிட்டுருச்சாம். தனக்குத்தானே விஷம் வெச்சிட்டு செத்துடுச்சு 'என்றான் சாரு...இதைக் கேட்டதும் சீனுவிற்கு சிரிப்புதான் வந்தது ..அந்த ஊர்த் தலைவரை யாருக்கும் பிடிப்பதில்லை... அவர்கள் மேலும் பேசாமல் கெம்டியை நோக்கி விரைந்து சென்றனர்.அப்போது அவர்களை நோக்கி தபால் மணி வந்து கொண்டிருந்தார். 'எங்களுக்கு ஏதாச்சும் கடுதாசி வந்து இருக்கா' என்று கேட்டான் சீனு.அவர்களுக்கு என்றும் கடுதாசி வந்ததில்லை. ஆனால் யார் யாருக்கு கடிதம் வந்திருக்கிறது என்ற ஆவல் அவர்களுக்கு எப்போதும் உண்டு. கர்னல் ராம் அவர்கள் தம் குடும்பத்திற்கு எழுதிய அஞ்சல் மட்டும் இருந்தது. அவருக்கு லடாக்கில் பணி இருப்பதாகவும், அங்கு மிகவும் குளிராக இருப்பதாகவும் எழுதியிருந்தார். அடுத்த மாதத்தில் பணி உயர்வு கிடைக்கலாம் என்றும் எழுதியிருந்தார்.உரை இட்ட கடிதம் அல்லாமல் இதுபோன்ற அஞ்சல் அட்டைகள் எழுதும் விபரங்கள் மற்றவர்களால் படிக்கப்படும் என்பது அவருக்கும் தெரியும். ஊர் மக்கள் அறியவேண்டும் என்பதற்காகவே விபரங்கள் அஞ்சலட்டையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவரவர், அவர்களது பாதையில் செல...