சொக்கநாத சரிதம்
சொக்கநாத சரிதம் ' அம்மா !!!!' என்ற அலறல் குதிரையின் சென்று கொண்டிருந்த அவ்வீரனை திகைப்படையச் செய்தது. அது அந்தி சாயும் நேரம். அடர்ந்த காடு. இதனுள் ஒரு பெண்ணின் குரல் கேட்டதால் வந்த திகைப்பு அது. ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல், குரல் வந்த திசையை நோக்கி சென்றான் அவன். காரிருள் சூழ்ந்திருந்தது போல அங்கு ஒரு யானை ஒரு யுவதியை மிதிக்க தயாராகிக்கொண்டிருந்தது. அவளைக் காப்பாற்ற யானையை திசை திருப்ப வேண்டும் என்று அவன் எண்ணினான். அதற்காக கையிலிருந்த கூர்வாளை அதனை நோக்கி விட்டெறிந்தான். அடி வாங்கிய அந்த யானை, அது நாடி வந்த யுவதியை விட்டு விட்டு வாளை விட்டெறிந்த இளைஞனை நோக்கி திரும்பியது. அந்த மத யானையிடம் இருந்து தப்பிக்க, அங்குமிங்குமாய் குதிரை ஓட்ட ஆரம்பித்தான் அவன் . தான் போக வேண்டிய இடத்திற்கு சம்பந்தமே இல்லாத ஒரு திசையில் அவன் சென்றான் .சிறிது நேரம் அவனைப் பின்தொடர்ந்து வந்த அந்த யானை சிறிது நேரத்திலேயே பின்வாங்கி வேறு திசையில் சென்...