Book review 9- A Christmas carol

கதை: A Christmas carol

ஆசிரியர்: Charles Dickens


வெளிநாடுகளில் இன்றளவிலும் பேசப்படும் ஒரு அறநெறி கதை இது.கிறிஸ்துமஸ் விழா என்பது மற்றவர்களுக்கு நம்மாலான பரிசுகளை கொடுத்தும், குடும்பத்தோடு கூடியும் கோலாகலமாக கொண்டாடப்படும் விழா.ஸ்கூருஜ் என்னும் பணக்கார கருமியைப் பற்றிய கதை.


 ஜாகப் மார்லே என்ற அவரது தொழிற் நண்பன் ,இறந்து ஏழு வருடங்கள் ஆகியும் தன் உறவுகளை மதிக்காததால் அந்நாள் வரை ஆவியாக அலைவதாக அவர் முன் தோன்றி கூறுகிறார்.


அதன்பிறகு ஸ்கூருஜ் இருக்கும் வீட்டிற்கு 3 ஆவிகள் வருகின்றன.முதல் ஆவி, அவரது கடந்த கால வாழ்க்கைக்கு அவரை அழைத்து செல்கிறது. சிறுவயது நினைவுகளில் மூழ்கும் அவர், பணத்தாசையால் என்னவெல்லாம் இருந்தார் என்பதை உணருகிறார். அழகான மனைவி குடும்பம் என்று வாழ வேண்டியவர் பண மோகத்தால் யாரும் இல்லாது தனியாளாய் விடப்பட்டதை உணர்கிறார்.


 அடுத்து வரும் ஆவி , தற்கால வாழ்வில் அவரை சுற்றி இருக்கும் மனிதர்களின் உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது. தனக்கு அடியில் வேலை செய்பவர் எவ்வாறு வாழ்வில் கஷ்டப்படுகிறார் என்பதை பார்க்கிறார். தான் அவருக்கு உதவக்கூடிய நிலையில் இருந்தாலும்,  இந்நாள் வரை அவரைக் கண்டு கொள்ளாதது கண்டு மனம் வெதும்புகிறார்.


 அடுத்து வரும் ஆவி,அவரை எதிர்காலத்திற்கு அழைத்து செல்ல, யாருமே மதிக்காத ,கவலைப்படாத மரணம் தனக்கு ஏற்படுவதை  காண்கிறார்.


இது அனைத்தும் கனவாய் கலைய, கிறிஸ்துமஸ் தினமான அன்று எவ்வாறு தன் தவறுகளை திருத்தினார் என்பதே மீதிக்கதை.


சொந்தங்களையும் சுற்றி இருப்போரையும் மதித்து ஏழை எளியோர்க்கு உதவிட வேண்டும் என்ற அறநெறியை வலியுறுத்த இக்கதையை பல நாடுகளில் குழந்தைகளுக்கு கூறுவர்


#booksofinstagram #writerstag #comics #காமிக்ஸ் #tamilbookreview #ABOOKADAY #booklover #bookworm #writerscommunity #writersofinstagram #ReviewinTamil #booksthatinspiredme #day9 #vintagecollection #AChristmasCarol #charlesdickens #childrensbooks #ReviewTime #ReviewPost

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பலாமரம்

Book review - perfectly imperfect

Book review 10- when the clock strikes thirteen