Book review 7- oru nadigai nadagam parkiral
கதை: ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ஆசிரியர்: ஜெயகாந்தன்
வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் படைத்த ஒரு பெண்ணின் கதை இது.வாழ்க்கையையே நாடகமாக நினைத்து, அதில் கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் எதுவானாலும் திறம்பட செய்துமுடிக்க வேண்டும் என்று எண்ணுகிறாள் கல்யாணி.
தாமரை இலையின் மேல் உள்ள தண்ணீர் போல எல்லா பாத்திரங்களையும் ஏற்கும் பக்குவம் அவளிடம் தென்படுகிறது. நாடக நடிகையாக வலம்வரும் அவள், ரங்கா என்னும் பத்திரிகையாளனிடம் தன் மனதை இழக்கிறாள். காதலில் இனிமையாக வாழ்க்கை செல்கையில், திருமணம் அவர்களுக்கு நடுவில் விரிசலை உண்டாக்குகிறது.
கல்யாணியின் பண்பட்ட மனமும், தன்னை விட அவளது அந்தஸ்து பெரிது என்ற ரங்காவின் சுய கழிவிரக்கமும் அவர்களை பிரித்து வைக்கிறது. தெளிந்த ஓடையாய் இருக்கும் கல்யாணியோ, எதனாலும் பாதிக்கப்படாதவளாய், மிகப் பெரிய எதிர்பார்ப்புகள் ஏதும் இன்றி வாழ முற்படுகிறாள்.
அவளுக்கு ஏற்படும் வியாதி, ஓயாது ஆடிய அவளது கால்களை முடக்க, பிரிந்த நெஞ்சங்கள் மீண்டும் இணைகிறது.
காதலில் மட்டுமல்ல வாழ்வில் எந்த ஒரு உறவுகளுக்கிடையேயும் எதிர்பார்ப்புகள் அதிகம் கூடாது என்பதற்கு கல்யாணியின் கதாபாத்திரம் ஒரு உதாரணம்.
பின்குறிப்பு:இக்கதை திரைப்படமாக வெளிவந்துள்ளது
#ABOOKADAY #day7 #bookstagram #bookaddict #booksthatinspiredme #tamilbooks #tamilbookreview #ReviewTime #ReviewPost #writerstag #writerscommunity #booksofinstagram #bookworm #writersofindia #Jeyakanthan #orunadigainaadagamparkiral
கருத்துகள்
கருத்துரையிடுக