Book review 8- the secret garden

 கதை: the secret garden

ஆசிரியர்:Frances Houston Burnett


அதிகாரத் தொனியில் பணக்கார குழந்தையாக வளர்க்கப்படும், மேரி என்னும் சிறுமியின் வாழ்வு எவ்வாறு ஒரு தோட்டத்தால் மாறுகிறது என்பதே கதையின் கரு.


ஆங்கிலேய நாடுகளில் இன்றளவிலும் இக்கதையை குழந்தைகளுக்கு கூறி வளர்க்கின்றனர். ஆங்கிலேய ஆதிக்கத்தில் இந்தியா இருந்தபோது மேரி இங்கு ஓர் ஆங்கிலேய தம்பதிக்கு பிறக்கிறாள். செல்வத்தில் மூழ்கி எழும் அவள், அன்பின் அலையே படாமல் வளர்கிறாள். மற்றவர்களை அதிகாரம் செய்தே வாழ பழகுகிறாள்.


 திடீரென்று அவளது பெற்றோரும் வேளையாட்களும் காலரா என்னும் கொடிய நோயால் இறக்க, தனித்து விடப்படும் அவள், லண்டனில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு கொண்டு செல்லப் படுகிறாள். அவளை பார்த்து கொள்ளும் மார்தா என்னும் வேலைக்காரப் பெண், தனது பெரிய குடும்பத்தை பற்றியும் கடைசி தம்பி டிக்கன் பற்றியும் அதிகமாக பேச, அச்சிறுவனை அவன் நண்பன் போல கருதுகிறாள்.


அவள் இருக்கும் பண்ணை வீடு, பல பல அறைகளை கொண்ட பல மர்மங்கள் நிறைந்திருக்கும் ஒரு வீடு. பத்து வருடங்களுக்கு முன் ,அவ்வீட்டின் ராணி இறக்க, அவள் போற்றி வளர்த்த தோட்டத்தை தாழிட்டு பூட்டி சாவியை எங்கோ புதைத்து வைத்திருப்பதாக மேரி அறிகிறாள்.


அங்கிருக்கும் பல தோட்டங்களில் அவள் உலவி வரும் நேரத்தில்,இந்த இரகசிய தோட்டத்தின் சாவியைக் கண்டுபிடிக்கிறாள்.

இது ஒருபுறமிருக்க,பல இரவுகளில் அலறல் சத்தம்  ஒன்று அவளை எழுப்ப, அதனை பின்பற்றி செல்லும்போது அங்கு ஒரு சிறுவனை காண்கிறாள்.


 அவ்வீட்டு ராஜாவின் குழந்தை அது.அவன் எழுந்து கூட நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருப்பது தெரிகிறது . சொத்துக்களை அபகரிக்க ,இல்லாத பல நோய்களை இருப்பதாக கூறி இந்நிலையில் அவனை வைத்திருக்கும் மருத்துவரையும் பார்க்கிறாள்.


அச்சிறுவனோடு டிக்கனையும் அழைத்துக்கொண்டு, அந்த ரகசிய தோட்டத்தில் விளையாட முற்படுகிறாள். அச்சிறுவனை எழ வைத்து நடக்க வைப்பதும், சுற்றி இருக்கும் செடிகளுக்கு உயிர் கொடுப்பதும், எல்லார் முன்பும் அவனை கொண்டு சென்று நிறுத்துவதும் மீதி கதை.


மேரி தோட்டத்தோடு ஒன்றி செடிகள் நடுவதைப் பற்றியும், அதை வளர்வதைப் பற்றியும் படிக்கும் பொழுது, நாம் ஏன் இதுபோல செடி வளர்க்கக் கூடாது என்று எண்ணத் தோன்றும்.


அதிகாரமாக பேசி வளரும் மேரி, தன் அருகில் உள்ளோரை ரசிக்கவும் ,மதிக்கவும்  பழகிக்கொள்வது அழகாக விளக்கப்பட்டிருக்கிறது.டிக்கன் பறவைகளிடமும் விலங்குகளிடமும் பேசும் காட்சிகள்,மேரிக்கு மட்டுமல்ல நமக்கும் அவன்பால் அன்பை சுரக்க வைக்கிறது.


தத்ரூபமாக அம்மாளிகையும் அதில் உள்ளோரும் நம் கண்முன் விரிகிறார்கள். சிறார்கள் மட்டுமல்ல பெரியவர்களும் படிக்க வேண்டிய கதை இது. மண்ணையும் அதில் வாழும் மரம் குருவி போன்ற அனைத்து உயிரினங்களின் சிறப்பையும் விளக்கும் அழகான கதை.#comics #காமிக்ஸ்


#ABOOKADAY #day8 #bookworm #bookstagram #bookaholic #ReviewinTamil #writerstag #writerscommunity #writersofindia #writersofinstagram #booksthatinspiredme #TheSecretGarden #vintagecollection #childrensbooks #franceshodgsonburnett

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பலாமரம்

Book review - perfectly imperfect

Book review 10- when the clock strikes thirteen