Book review- kaavi nirathil oru kaadhal
கதையின் பெயர்: காவி நிறத்தில் ஒரு காதல்
ஆசிரியர் :வைரமுத்து
பல வருடங்களாக காட்டிற்குள் அடைந்து கிடக்கும் மனிதன் ஒருவன், வெளியுலகை நோக்கி வரும் போது ஏற்படும் நிகழ்வுகள் தான் இக் கதையின் சாராம்சம். பல ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்ய முடியாமல் போன தன் காதலியை பார்க்க வரும் காதலனின் பயணம் இது.
வெளியுலகத் தொடர்பு அற்றுப் போனதில், நாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் அவனுக்கு வியப்பை அளிக்கிறது .அதேசமயம் அவனை மற்றவர்கள் பார்க்கும் போது பைத்தியக்காரனாக பார்க்கிறார்கள்.
தன் காதலியைத் தேடி ஊர் ஊராக அலைந்து, அதனால் பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்கிறான் அவன். அவள் பட்ட துயரங்களை எல்லாம் அவள் சென்ற இடத்திற்கே சென்று உணர்கிறான்.
சங்க கால பெண் போல் சித்தரிக்கப்படும் அப்பெண், பின்னாளில் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் எவ்வாறு ஒரு போராளியாக மாறுகிறாள் என்பதை அழகாகக் கூறுகிறார் ஆசிரியர்.
சாதாரண பெண்கள் மட்டுமில்லை தீவிரவாதியே ஆனாலும் அவளை சுற்றிலும் என்னாலும் ஆபத்து சூழ்ந்து இருக்கிறது என்பதை அழகாக இக்கதை மூலம் உணரலாம்.
பல இன்னல்கள் கடந்து காதலியை அவன் சந்திக்கும் வேளையில், அவளிடம் தன்னைப் பற்றி கூற இயலாமல் தவிக்கும் நிலை கண்ணீரில் ஆழ்த்துகிறது.
இவ்வுலகில் சிக்கி வாழ்வதற்கு காட்டிற்குள் தனியாகவே வாழ்ந்து விடலாம் என்று வாசகர்களுக்கு தோணலாம். எதிர்பாராத திருப்பங்களுடன் நிகழ்ச்சியான முடிவுடன் அமைந்துள்ளது இக்கதை. படிப்பவர் அனைவரும் இறுதியில் கண் கலங்குவது திண்ணம்.
#ABOOKADAY #day3 #bookaholic #bookstagram #bookworm #bookish #tamilbooks #bookthatinspiredme #Vairamuthu #kaavinirathilorukadhal #tamilbookreview
கருத்துகள்
கருத்துரையிடுக