Book review- kallo kaaviyamo

 

புத்தகம்: கள்ளோ!! காவியமோ!!
ஆசிரியர் : மு வரதராசனார்

ஆண் பெண் உறவு எவ்வளவு மேம்பட்டு இருக்கிறது என்பதை இக்கதை படிக்கும் போது நாம் உணரலாம். உள்ளதால் இணைந்த இருவர் தமக்குள் நிகழ்ந்த சிறு சண்டையால் பிரிய, அவரவர் வாழ்வில் நிகழ்ந்த மாற்றங்களை அழகாக சித்தரிக்கிறார் வரதராசனார்.

ஆண் துணை இல்லாமல் வாழ்வது கடினம் என்று இருந்த காலத்தில், மொழி தெரியாத ஒரு ஊரில் தன் நலனைக் காத்துக் கொள்ளும் மங்கை, இறுதியில் விதியின் வலிமை யால் தன் தலைவனை காண்கிறாள். அவள் கற்பை எவ்வகையிலும் சந்தேகிக்காமல் பழைய அன்போடு ஏற்றுக் கொள்கிறான் கணவன். தம்பதிகளிடையே ஏற்படும் ஊடலை அழகாகத் தத்ரூபமாக கூறியிருக்கிறார் வரதராசனார்.

இப்புத்தகத்தின் சிறப்பு என்னவெனில், ஒவ்வொருவரின் மனப்போக்கையும் அவரவர் கூறுவது போல எழுதியது தான். கதையை முடிக்கும்போது சிறிது கண்ணீர் வருவது உறுதி.

சிலகணங்கள் தோன்றும் கோபங்களை கட்டுப்படுத்தாவிடில் ஏற்படும் விளைவுகளை அழகாக சித்தரிக்கும் கதை இது.

#book review #bookworm #booklover #bookstagram #ABOOKADAY #bookish #kallokaaviyamo #mu.va

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Book review- solaimalai ilavarasi

Book review - perfectly imperfect

Only the good die young and I'm not a saint- book review