Book review - karunaiyinal alla
கதையின் பெயர்: கருணையினால் அல்ல
ஆசிரியர்: ஜெயகாந்தன்
30 வயதை கடந்தும் தனியாளாய் வாழ்க்கையை எதிர்கொள்ளும் கௌரிக்கு திடீரென்று ஒரு வெறுமை ஏற்படுகிறது.
உயிர் இருக்கிறது என்று உடலும், உடல் இருக்கிறது என்று வயிறும்,வயிற்றுக்காக வேலையும், வேலைக்காக ஒரு அலங்காரமும், என்று பிடிப்பில்லாமல் செல்கிறது அவள் வாழ்க்கை.
தான் குடியிருக்கும் ஒண்டி குடுத்தன வீட்டில் தங்கியிருக்கும், தன்னைப்போல அனாதையான முதலியாரிடம் கருணை பிறக்கிறது.
ஆண் பெண் உறவுகள் பெரியதொரு மேம்பாடு காணாமல் இருந்த 1960களில் இதுபோன்ற ஒரு கரை கதை காண்பது அரிது.
அன்பிற்கு முதல்படி கருணை அன்றோ!!! தனிமனித உணர்வுகளையும் அவர்களது தாழ்மை மனப்பான்மையையும், அவர்களது வெறுமைகளையும் அவர்களே விவரிப்பது போல,அழகான நடையில் எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
#bookworm #bookaholic #bookaddict #booklover #bookstagram #bookreader #bookreview #ReviewinTamil #day4 #ABOOKADAY #bookreading #Jeyakanthan #karunaiyinalalla #readingisfun #reviewtime #ReviewPost #booksfrompreviousgeneration #1965
கருத்துகள்
கருத்துரையிடுக