Book review- thenpandi singam

 கதை :தென்பாண்டி சிங்கம்

ஆசிரியர் :கலைஞர் கருணாநிதி


ஆங்கிலேய ஆதிக்கம் பெரும் நோயைப் போல இந்தியா எங்கிலும் பரவ, அவர்களை எதிர்த்து முதலில் களமிறங்கிய வீரபாண்டிய கட்டபொம்மனை நாம் இன்றளவிலும் போற்றி வருகிறோம் . அவரது வீரத்தின் சிறிதும் குறையாத மன்னன் ஒருவன் சூழ்ச்சியால் விழுந்த கதை தான் தென்பாண்டி சிங்கம்.


கட்டபொம்மனை தூக்கிலிட்டதும் ,அவரது தம்பி ஊமைத்துரை மருது பாண்டியர்களுடன் சேர்ந்து ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்தார். அதனால் சிவகங்கை மாவட்டம், காளையார் கோவிலை தன் ஆட்சிக்குக் கொண்டு வர திட்டமிட்டது ஆங்கிலேய அரசு. அதனை சிறிதும் விரும்பாத மருது சகோதரர்கள், தங்கள் ஆட்சிக்குட்பட்ட கள்ளர் நாடுகளின் படையோடு ஆங்கிலேயரை எதிர்க்க திட்டமிட்டனர். கள்ளர் நாடுகளில் ஒரு நாட்டின் தலைவன் தான்  வாளுக்கு வேலி.தென்பாண்டி சிங்கம் என்று அழைக்கப்பட்டவர்.


வீரம் துள்ளுகின்ற வார்த்தைகளால் அமைந்த பெயர். சூரியன் அஸ்தமிக்காத காலனி ஆதிக்கத்தை உருவாக்க வேண்டும் என்று வெறி கொண்டு அலைந்த ஆங்கிலேயரை துச்சமென மதித்து மருது பாண்டியர்களுக்கு துணை நின்ற வீரன். இத்தகைய வீரன் எதிர்கட்சியில் இருந்தால் மருது சகோதரர்களை எதிர்த்து நிற்க முடியாது என்று கருதிய ஆங்கிலேயர்கள், கலகத்தை உருவாக்க திட்டமிட்டனர். பிரித்தாளும் சூழ்ச்சியை கைகொண்ட அவர்கள், கள்ளர் நாடுகளில் மிகுந்த பலம் நிறைந்த நாடுகளான பாகனேரி மட்டும் பட்டமங்கலத்தை மோதவிட்டு வேடிக்கை பார்த்தனர்.


வீரத்தை மட்டுமே பிரதானமாக கருதிய அவ்விரு நாடுகளும் சூட்சியில் சிக்கி தவித்தன. தம் நண்பர் நாடுகளான பிற கள்ளர் நாடுகளையும் உட்கட்சிப் போருக்கு அழைத்தார் வாளுக்கு வேலி.


 இந்தப் போர் நடைபெற்ற நேரத்தில் தான், மருது சகோதரர்களை கைது செய்து சிறையில் அடைத்தது ஆங்கிலேய அரசு. காளையார்கோவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு அடியில் வந்தது. தன் தவறை உணர்ந்த வாளுக்குவேலி, படைகளை ஒன்று திரட்டி ஆங்கிலேயருக்கு எதிராக வழிநடத்திச் சென்ற போது, வஞ்சகமாகக் புதைகுழியில் விழுந்து மாண்டார்.


அந்த  தென்பாண்டி சிங்கம் , கத்தப்பட்டு என்னும் இடத்தில் இன்றும் சிலையாக நின்று கொண்டிருக்கிறார். போர்க்களத்தில் வீரமரணம் அடைந்து இருக்க வேண்டிய வீரன், சூழ்ச்சிக்கு சாட்சியாக இன்றும் நின்று கொண்டிருக்கிறான்.


இவ்வுண்மை கதையை சிற்சில கற்பனைகள் சேர்த்து அழகாக உருவாக்கி இருக்கிறார் ஆசிரியர்.


#bookstagram #bookworm #booklover #ReviewPost #ABOOKADAY #day6 #tamilbooks #booksthatinspiredme #booksofinstagram #ReviewinTamil #bookaholic #tamilbookreview #Karunanidhi #ThenpandiSingam #vaalukuveli #maruthupandiyar

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Book review- solaimalai ilavarasi

Book review - perfectly imperfect

Only the good die young and I'm not a saint- book review