இடுகைகள்

செப்டம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Book review 10- when the clock strikes thirteen

  மூன்றாம் ஆண்டு விழா பதிவு : 3 கதை: when the clock strikes thirteen ஆசிரியர் : Ruskin Bond பத்மபூஷன் பத்மஸ்ரீ போன்ற விருதுகளைப் பெற்ற ரஸ்கின் பாண்டின் பல கதைகள் பாட புத்தகங்களில் இடம் பெற்றுள்ளது. இக்கதைத்தொகுப்பு பதினைந்து கதைகள் கொண்ட தொகுப்பு. இவற்றில் உள்ள அனைத்துக் கதைகளுக்கும் பொதுவாக அமைவன, அவற்றின் கதைகலன்களே.மலைவாழ் கிராமங்களில் வாழும் குழந்தைகள் பற்றியும் , அம்மக்களைப் பற்றியும் அவர் அதில் அழகாக வர்ணித்து இருப்பார் குறிப்பாக, Panther's moon இக்கதையில் வரும் பிஸ்ணு என்னும் சிறுவன் பள்ளி செல்ல எத்தகைய அபாயங்களை கடந்து போகிறான் என்பதையும் அவனது விடா முயற்சியையும் அழகாய் உணர வைத்திருப்பார்.இயற்கையோடு ஒன்றிய மக்களின் வாழ்வு அனைத்து குழந்தைகளும் படித்து புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. A long walk for Bina இக்கதையின் கரு முந்தைய கதையைப் போலவே அமைந்தாலும், பீனா, பிரகாஷ் ஆகியோர் படிப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள் நமது ஆர்வத்தை தூண்டுகிறது. அவர்களது ஆசிரியர் வளர்க்கும் தோட்டம் நம்மையும் செடிகள் நட வைக்கிறது. The cherry tree தாத்தாவும் பேரனும் சேர்ந்து வளர்க்கும் மரம் பற்...

Book review 9- A Christmas carol

கதை: A Christmas carol ஆசிரியர்: Charles Dickens வெளிநாடுகளில் இன்றளவிலும் பேசப்படும் ஒரு அறநெறி கதை இது.கிறிஸ்துமஸ் விழா என்பது மற்றவர்களுக்கு நம்மாலான பரிசுகளை கொடுத்தும், குடும்பத்தோடு கூடியும் கோலாகலமாக கொண்டாடப்படும் விழா.ஸ்கூருஜ் என்னும் பணக்கார கருமியைப் பற்றிய கதை.  ஜாகப் மார்லே என்ற அவரது தொழிற் நண்பன் ,இறந்து ஏழு வருடங்கள் ஆகியும் தன் உறவுகளை மதிக்காததால் அந்நாள் வரை ஆவியாக அலைவதாக அவர் முன் தோன்றி கூறுகிறார். அதன்பிறகு ஸ்கூருஜ் இருக்கும் வீட்டிற்கு 3 ஆவிகள் வருகின்றன.முதல் ஆவி, அவரது கடந்த கால வாழ்க்கைக்கு அவரை அழைத்து செல்கிறது. சிறுவயது நினைவுகளில் மூழ்கும் அவர், பணத்தாசையால் என்னவெல்லாம் இருந்தார் என்பதை உணருகிறார். அழகான மனைவி குடும்பம் என்று வாழ வேண்டியவர் பண மோகத்தால் யாரும் இல்லாது தனியாளாய் விடப்பட்டதை உணர்கிறார்.  அடுத்து வரும் ஆவி , தற்கால வாழ்வில் அவரை சுற்றி இருக்கும் மனிதர்களின் உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது. தனக்கு அடியில் வேலை செய்பவர் எவ்வாறு வாழ்வில் கஷ்டப்படுகிறார் என்பதை பார்க்கிறார். தான் அவருக்கு உதவக்கூடிய நிலையில் இருந்தாலும்,  இந்நாள் ...

Book review 8- the secret garden

 கதை: the secret garden ஆசிரியர்:Frances Houston Burnett அதிகாரத் தொனியில் பணக்கார குழந்தையாக வளர்க்கப்படும், மேரி என்னும் சிறுமியின் வாழ்வு எவ்வாறு ஒரு தோட்டத்தால் மாறுகிறது என்பதே கதையின் கரு. ஆங்கிலேய நாடுகளில் இன்றளவிலும் இக்கதையை குழந்தைகளுக்கு கூறி வளர்க்கின்றனர். ஆங்கிலேய ஆதிக்கத்தில் இந்தியா இருந்தபோது மேரி இங்கு ஓர் ஆங்கிலேய தம்பதிக்கு பிறக்கிறாள். செல்வத்தில் மூழ்கி எழும் அவள், அன்பின் அலையே படாமல் வளர்கிறாள். மற்றவர்களை அதிகாரம் செய்தே வாழ பழகுகிறாள்.  திடீரென்று அவளது பெற்றோரும் வேளையாட்களும் காலரா என்னும் கொடிய நோயால் இறக்க, தனித்து விடப்படும் அவள், லண்டனில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு கொண்டு செல்லப் படுகிறாள். அவளை பார்த்து கொள்ளும் மார்தா என்னும் வேலைக்காரப் பெண், தனது பெரிய குடும்பத்தை பற்றியும் கடைசி தம்பி டிக்கன் பற்றியும் அதிகமாக பேச, அச்சிறுவனை அவன் நண்பன் போல கருதுகிறாள். அவள் இருக்கும் பண்ணை வீடு, பல பல அறைகளை கொண்ட பல மர்மங்கள் நிறைந்திருக்கும் ஒரு வீடு. பத்து வருடங்களுக்கு முன் ,அவ்வீட்டின் ராணி இறக்க, அவள் போற்றி வளர்த்த தோட்டத்தை தாழிட்டு பூட்டி சாவி...

Book review 7- oru nadigai nadagam parkiral

 கதை: ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ஆசிரியர்: ஜெயகாந்தன் வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் படைத்த ஒரு பெண்ணின் கதை இது.வாழ்க்கையையே நாடகமாக நினைத்து, அதில் கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் எதுவானாலும் திறம்பட செய்துமுடிக்க வேண்டும் என்று எண்ணுகிறாள் கல்யாணி.  தாமரை இலையின் மேல் உள்ள தண்ணீர் போல எல்லா பாத்திரங்களையும் ஏற்கும் பக்குவம் அவளிடம் தென்படுகிறது. நாடக நடிகையாக வலம்வரும் அவள், ரங்கா என்னும் பத்திரிகையாளனிடம் தன் மனதை இழக்கிறாள். காதலில் இனிமையாக வாழ்க்கை செல்கையில், திருமணம் அவர்களுக்கு நடுவில் விரிசலை உண்டாக்குகிறது. கல்யாணியின் பண்பட்ட மனமும், தன்னை விட அவளது அந்தஸ்து பெரிது என்ற ரங்காவின் சுய கழிவிரக்கமும் அவர்களை பிரித்து வைக்கிறது. தெளிந்த ஓடையாய் இருக்கும் கல்யாணியோ, எதனாலும் பாதிக்கப்படாதவளாய், மிகப் பெரிய எதிர்பார்ப்புகள் ஏதும் இன்றி வாழ முற்படுகிறாள். அவளுக்கு ஏற்படும் வியாதி, ஓயாது ஆடிய அவளது கால்களை முடக்க, பிரிந்த நெஞ்சங்கள் மீண்டும் இணைகிறது.  காதலில் மட்டுமல்ல வாழ்வில் எந்த ஒரு உறவுகளுக்கிடையேயும் எதிர்பார்ப்புகள் அதிகம் கூடாது என்பதற்கு க...

Book review- thenpandi singam

 கதை :தென்பாண்டி சிங்கம் ஆசிரியர் :கலைஞர் கருணாநிதி ஆங்கிலேய ஆதிக்கம் பெரும் நோயைப் போல இந்தியா எங்கிலும் பரவ, அவர்களை எதிர்த்து முதலில் களமிறங்கிய வீரபாண்டிய கட்டபொம்மனை நாம் இன்றளவிலும் போற்றி வருகிறோம் . அவரது வீரத்தின் சிறிதும் குறையாத மன்னன் ஒருவன் சூழ்ச்சியால் விழுந்த கதை தான் தென்பாண்டி சிங்கம். கட்டபொம்மனை தூக்கிலிட்டதும் ,அவரது தம்பி ஊமைத்துரை மருது பாண்டியர்களுடன் சேர்ந்து ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்தார். அதனால் சிவகங்கை மாவட்டம், காளையார் கோவிலை தன் ஆட்சிக்குக் கொண்டு வர திட்டமிட்டது ஆங்கிலேய அரசு. அதனை சிறிதும் விரும்பாத மருது சகோதரர்கள், தங்கள் ஆட்சிக்குட்பட்ட கள்ளர் நாடுகளின் படையோடு ஆங்கிலேயரை எதிர்க்க திட்டமிட்டனர். கள்ளர் நாடுகளில் ஒரு நாட்டின் தலைவன் தான்  வாளுக்கு வேலி.தென்பாண்டி சிங்கம் என்று அழைக்கப்பட்டவர். வீரம் துள்ளுகின்ற வார்த்தைகளால் அமைந்த பெயர். சூரியன் அஸ்தமிக்காத காலனி ஆதிக்கத்தை உருவாக்க வேண்டும் என்று வெறி கொண்டு அலைந்த ஆங்கிலேயரை துச்சமென மதித்து மருது பாண்டியர்களுக்கு துணை நின்ற வீரன். இத்தகைய வீரன் எதிர்கட்சியில் இருந்தால் மருது சகோதரர்களை எ...

Book review- solaimalai ilavarasi

 கதை: சோலைமலை இளவரசி  ஆசிரியர் :கல்கி சங்ககால இராஜ வாழ்க்கைக்கும், தற்கால தேசத் தொண்ட வாழ்க்கைக்கும் நடுவில் சிக்கி தவிக்கும் குமாரலிங்கத்தின் கதைதான் இந்த சோலைமலை இளவரசி.  குமாரலிங்கம், தனது பூர்வ ஜென்ம நினைவுகளால் சிக்கித் தவிக்கிறான். 300 ஆண்டுகளுக்கு முன்பு ,ஆங்கிலேயரை எதிர்த்த மாறனேந்தல் இளவரசன், உலகநாத தேவனாக தன்னை கனவில் காண்கிறான். ஆங்கிலேயரிடம் இருந்து தப்பிக்க, சோலைமலை அரண்மனைக்குள் உலகநாதன் புக், அந்நாட்டின் இளவரசி அவனுக்கு உதவிக்கரம் கொடுக்கிறாள். இருவரும் காதலில் திளைத்திருக்கையில், விதி அவனை ஆங்கிலேயர்களின் சிக்க வைக்கிறது. அந்த இளவரசியை,தனக்கு தற்போது உதவும் பொன்னம்மாளாக  நேரில் பார்ப்பவனுக்கு திகைப்பு உண்டாகிறது .கனவில் கண்ட நிகழ்ச்சிகள் போல நேரிலும் நடப்பதால், சொல்லோன்னா ஆச்சர்யத்தில் ஆழ்கிறான். நிகழ்காலத்தில் அதே போல் ஆங்கிலேயரிடம் சிக்கி தப்பித்து வருபவன், பொன்னம்மாள் சித்த பிரமை பிடித்தவளாக இருப்பதை காண்கிறான். தன்னையே சோலைமலை இளவரசியாக அவள் வரித்து அக்கால நிகழ்வுகளில் மூழ்க, குமாரலிங்கம் மனம் நொந்து சாமியார் ஆகிறான். சங்க கால நிகழ்வு ஒன்று, அதன் ...

Book review - karunaiyinal alla

கதையின் பெயர்: கருணையினால் அல்ல ஆசிரியர்: ஜெயகாந்தன் 30 வயதை கடந்தும் தனியாளாய் வாழ்க்கையை எதிர்கொள்ளும் கௌரிக்கு திடீரென்று ஒரு வெறுமை ஏற்படுகிறது. உயிர் இருக்கிறது என்று உடலும், உடல் இருக்கிறது என்று வயிறும்,வயிற்றுக்காக வேலையும், வேலைக்காக ஒரு அலங்காரமும், என்று பிடிப்பில்லாமல் செல்கிறது அவள் வாழ்க்கை. தான் குடியிருக்கும் ஒண்டி குடுத்தன வீட்டில் தங்கியிருக்கும், தன்னைப்போல அனாதையான முதலியாரிடம் கருணை பிறக்கிறது. ஆண் பெண் உறவுகள் பெரியதொரு மேம்பாடு காணாமல் இருந்த 1960களில் இதுபோன்ற ஒரு கரை கதை காண்பது அரிது. அன்பிற்கு முதல்படி கருணை அன்றோ!!! தனிமனித உணர்வுகளையும் அவர்களது தாழ்மை மனப்பான்மையையும், அவர்களது வெறுமைகளையும் அவர்களே விவரிப்பது போல,அழகான நடையில் எழுதியிருக்கிறார் ஆசிரியர். #bookworm #bookaholic #bookaddict #booklover #bookstagram #bookreader #bookreview #ReviewinTamil #day4 #ABOOKADAY #bookreading #Jeyakanthan #karunaiyinalalla #readingisfun #reviewtime #ReviewPost #booksfrompreviousgeneration #1965

Book review- kaavi nirathil oru kaadhal

 கதையின் பெயர்: காவி நிறத்தில் ஒரு காதல் ஆசிரியர் :வைரமுத்து பல வருடங்களாக காட்டிற்குள் அடைந்து கிடக்கும் மனிதன் ஒருவன், வெளியுலகை நோக்கி வரும் போது ஏற்படும் நிகழ்வுகள் தான் இக் கதையின் சாராம்சம். பல ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்ய முடியாமல் போன தன் காதலியை பார்க்க வரும் காதலனின் பயணம் இது. வெளியுலகத் தொடர்பு அற்றுப் போனதில், நாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் அவனுக்கு வியப்பை அளிக்கிறது .அதேசமயம் அவனை மற்றவர்கள் பார்க்கும் போது பைத்தியக்காரனாக பார்க்கிறார்கள். தன் காதலியைத் தேடி ஊர் ஊராக அலைந்து, அதனால் பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்கிறான் அவன்.   அவள் பட்ட துயரங்களை எல்லாம் அவள் சென்ற இடத்திற்கே சென்று உணர்கிறான்.  சங்க கால பெண் போல் சித்தரிக்கப்படும் அப்பெண், பின்னாளில் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் எவ்வாறு ஒரு போராளியாக மாறுகிறாள் என்பதை அழகாகக் கூறுகிறார் ஆசிரியர். சாதாரண பெண்கள் மட்டுமில்லை தீவிரவாதியே ஆனாலும் அவளை சுற்றிலும் என்னாலும் ஆபத்து சூழ்ந்து இருக்கிறது என்பதை அழகாக இக்கதை மூலம் உணரலாம். பல இன்னல்கள் கடந்து காதலியை அவன் சந்திக்கும் வேளையில், அவளிடம் தன்னைப் பற்றி கூ...

Book review- kallo kaaviyamo

  புத்தகம்: கள்ளோ!! காவியமோ!! ஆசிரியர் : மு வரதராசனார் ஆண் பெண் உறவு எவ்வளவு மேம்பட்டு இருக்கிறது என்பதை இக்கதை படிக்கும் போது நாம் உணரலாம். உள்ளதால் இணைந்த இருவர் தமக்குள் நிகழ்ந்த சிறு சண்டையால் பிரிய, அவரவர் வாழ்வில் நிகழ்ந்த மாற்றங்களை அழகாக சித்தரிக்கிறார் வரதராசனார். ஆண் துணை இல்லாமல் வாழ்வது கடினம் என்று இருந்த காலத்தில், மொழி தெரியாத ஒரு ஊரில் தன் நலனைக் காத்துக் கொள்ளும் மங்கை, இறுதியில் விதியின் வலிமை யால் தன் தலைவனை காண்கிறாள். அவள் கற்பை எவ்வகையிலும் சந்தேகிக்காமல் பழைய அன்போடு ஏற்றுக் கொள்கிறான் கணவன். தம்பதிகளிடையே ஏற்படும் ஊடலை அழகாகத் தத்ரூபமாக கூறியிருக்கிறார் வரதராசனார். இப்புத்தகத்தின் சிறப்பு என்னவெனில், ஒவ்வொருவரின் மனப்போக்கையும் அவரவர் கூறுவது போல எழுதியது தான். கதையை முடிக்கும்போது சிறிது கண்ணீர் வருவது உறுதி. சிலகணங்கள் தோன்றும் கோபங்களை கட்டுப்படுத்தாவிடில் ஏற்படும் விளைவுகளை அழகாக சித்தரிக்கும் கதை இது. #book review #bookworm #booklover #bookstagram #ABOOKADAY #bookish #kallokaaviyamo #mu.va

Book review - blue umbrella

 Book name : blue umbrella Author: Ruskin bond சிறுவயதில் நம்மனைவருக்கும் பொக்கிஷமாக ஏதோ ஒரு பொருள் இருந்திருக்கும். பலர் அதனை இந்நாள் வரை கூட பாதுகாத்து வந்து இருப்பர். மற்றவர்கள் அதனை பார்க்கும் போது, அது அவர்களுக்கு சிறுபிள்ளைத்தனமாக தெரியலாம்.  அதுபோலதான், ஒரு மலைக்கிராமப் பெண்ணின் கையில் ஒரு நீலக்குடை கிடைக்கிறது .அது அவளுக்கு விலைமதிப்புள்ள பொருள் ஆகிறது.அவ்வூரில் எவரிடமும் வண்ணக்குடை இல்லாததும் இதற்கு ஒரு காரணமாகும்.  அரிதான பொருள் எங்கும் எப்போதும் அவள் எடுத்து செல்ல, ஊரிலுள்ளோர் அதனைக் கண்டு பொறாமைப் பட, அதனை அவள் அழகாக விட்டுக் கொடுக்கும் விதம் நெகிழச் செய்கிறது. அக்கால கிராம மலைவாழ் கிராம மக்களின் வாழ்க்கையை துல்லியமாய் கற்க, இப்புத்தகம் உதவும். அனைத்து சிறுவர்களும் படிக்க வேண்டிய புத்தகம். #RuskinBond #bookstagram#bookreview #ABOOKADAY #childrensbooks #blueumbrella #bookworm #booktube #booktoday #booktime #booklover

பலாமரம்

 மித்ரா செய்வது பைத்தியக்காரத்தனமாக தோன்றியது அம்மாவிற்கு.தன் பேச்சை யார் கேட்கப் போகிறார்கள் என்று திட்டிக்கொண்டே அன்றிரவு சமையல் செய்ய கிளம்பினார்.மித்ரா வீட்டிற்கு செல்ல பிள்ளை.வெகு காலமாய் மித்ராவின் பெற்றோருக்கு குழந்தை இல்லாமல் இருந்து பிறந்த பிள்ளை. அதனால் மித்ரா சொல்வதை மறுப்பதற்கு வீட்டில் யாரும் இல்லை.அப்படி அவள் விருப்பத்திற்கு மரியாதை கொடுத்ததற்கு அம்மா பலமுறை புலம்பியிருக்கிறார். மித்ரா படித்து பட்டம் பெற்று பெரிய நிறுவனத்தில் வேலையில் சேர்ந்ததும், மித்ராவின் பெற்றோர் பூரித்துப் போயினர்.ஆனால் ஆறு மாதமே அம்மகிழ்ச்சி நிலைத்தது. வேலை பிடிக்கவில்லை என்று எவர் பேச்சையும் கேட்காமல் அவள் வேலையை விட்டிருந்தாள். தனியாக தொழில் செய்யப் போவதாக அவள் கூறியதும், அம்மா அவளைத் திட்ட ஆரம்பித்தது இன்று வரை தொடர் கதை ஆகிவிட்டது. மித்ரா அம்மா அப்பாவிற்காக படித்து பட்டம் பெற்றது மட்டுமல்லாமல், அவர்கள் விருப்பப்படி வேலையிலும் சேர்ந்தாயிற்று. எனினும் என் வாழ்க்கை எவ்வகையிலும் எனக்கு ஆத்ம திருப்தி அளிக்கவில்லை.  பெங்களூர் வந்த இரண்டாம் மாதமே எனக்கு ஒன்று புலனாயிற்று.எனக்கு பிடித்ததை செய்ய...